Saturday, December 14, 2013

Trance (2013) ;

Trance (2013) ;


மாடர்ன் ஆர்ட்'ம் , surrealistic film makingம் கை கோர்த்த, 
பக்காவான ஒரு psychological crime thriller .
பிரபலமான ஒரு ஏல மையத்தில் 25 million dollar மதிப்புள்ள ஒரு ஓவியம் கொள்ளையடிக்கப் படுகிறது . கொள்ளையைத் தடுக்கப்போன ஏல மைய ஊழியன் simon'க்குத் தலையில் அடிபட , Simon அம்னீஷியாவுக்கு செல்கின்றான்.
கொள்ளையடித்த ஓவியத்துடன் , வீட்டுக்கு வரும் கொள்ளையர் குழு , ஆர்வமாக பையைத் திறந்து பார்க்க , வெறும் frame ' மட்டுமே இருக்கிறது. ஓவியம் எங்கே...?
அதன் பிறகு தான் தெரிகிறது , அந்தக் கொள்ளைக்கூட்டத்தில் simon'ம் ஒருவன் என்பது. ஓவியம் அவனிடம் தான் இருக்க வேண்டுமென விசாரித்தால் , simon'னோ தலையில் அடிபட்டதால், எல்லாமும் மறந்து போய், blank' காக இருக்கிறான்.
Simon பொய் சொல்லவில்லை என்பதை உறுதி செய்து கொண்டு, மறந்து போனதை நினைவூட்ட அவனை ஒரு Hypnotherapist'டிடம் அழைத்து செல்ல...
இதுக்கு மேல spoiler இல்லாம இத சொல்ல முடியாது , so, watch urself to enjoy.

படம் visually very strong . Editing கோட முக்கியத்துவம் இந்தப்படத்த பாத்து தெரிஞ்சுக்கலாம்.
படம் முழுவதுமே Simon, POV ல நகர்வதால் , அவனைப்போலவே ்நமக்கும் குழப்பம்.
படம் முழுவதுமே இப்படி இருக்குமோ, அப்படி இருக்குமோன்னு யோசிக்க வெச்சுட்டே இருக்கும்.
இந்தப்பட மேக்கிங் ESSM படத்த நினைவு படுத்துச்சு,
இதுக்கு மேல ஒளறி வெச்சுடுவேன். வேணாம்....
David Lynch meets louis bunuel, கண்டிப்பா பார்க்க வேண்டிய படம்.


http://www.youtube.com/watch?v=L4_bdS3_gr0

Christopher Nolan a.k.a Screenplay


Christopher Nolan a.k.a Screenplay


ஆங்கிலத்தில் ஒரு சொலவடை உண்டு A good music director cannot be a good conductor, அதே போல , a good screenwriter cannot be a good director ன்னும் சொல்லலாம்.
ஆனால் விதிவிலக்காக சில அதிசயங்கள் நடப்பதுண்டு. அப்படிப்பட்ட ஒரு அதிசயம் தான் Christopher Nolan.
2008 வாக்கில் twisted படங்களின் மீது பைத்தியமாகி அது தொடர்பான படங்களைத் தேடித்தேடிப் பார்த்த காலகட்டம், எப்படியோ The prestige படத்தைப்பற்றிக் கேள்விப்பட்டு, அந்த DVD யையும் பர்மா பஜாரில் வாங்கியாயிற்று, ஆனால் ,அது ஒரு விக்டோரியன் காலகட்டப்படம் , அந்தப்பீரியட் படம் என்றாலே , மொக்கையாகத்தான் இருக்கும் என்ற பொதுக்கருத்து மண்டைக்குள் பதிந்திருந்ததால் வெகு நாட்களாக அதைப்பார்க்க முடியாமலே இருந்தது.
பின்னர் யதேச்சையாக ஒருமுறை, பார்க்க வேறு படம் இல்லாததால், Prestige படத்தைப்பார்க்க வேண்டியதாகியது.
நான் எவ்வளவு பெரிய முட்டாள் என்பது அப்போதுதான் தெரிந்தது, நான் லினேயரில் , புத்திசாலித்தனமாக எழுதப்பட்ட திரைக்கதையும், தெளிவான இயக்கமும்
, வசனங்களும் படம் பார்க்கும் போது தந்த உணர்வை விவரிக்கவே முடியாதது. சிகரம் வைத்தாற்போல அந்தப்படத்தின் க்ளைமேக்ஸ், சொன்னால் நம்ப மாட்டீர்கள் , கண்களில் கண்ணீரே வந்துவிட்டது . ஒரு இரண்டு, மூன்று நாட்கள் அந்தப்படத்திலிருந்து வெளியே வரவே முடியவில்லை .


அதன்பிறகுதான் யார் இந்த கிறிஸ்டோபர் நோலன் ? எனத்தேட ஆரம்பித்து, அவருடைய படங்களைத் தேடித்தேடிப் பார்க்க ஆரம்பித்தேன்.
அதன்பின் வரிசையாக ஆச்சர்யங்கள் காத்திருந்தது. ஒவ்வொரு படங்களுமே புதிரைப் போன்று அமைக்கப்பட்ட திரைக்கதையுடன் அசரடித்தது.
ஏனென்றால் பிற இயக்குனர்களின் படத்தைப்பார்க்கும் போது , ஒரு இனம் புரியாத சந்தோஷத்தைத் தரும். ஆனால் கிறிஸ்டோபர் நோலன் படங்களை நினைத்தாலே அந்த feel வந்தது. இனி அவரது படங்களின் ஒன் லைன் அறிமுகம். (தேவையா என்ன...??!)

Following - வெறும் 6,000 $ பட்ஜெட்'ல் நிகழ்த்தப்பட்ட அற்புதம். இதன் திரைக்கதை, முழுப்படமும் கடைசி கால்மணி நேரத்தில் தான் புரியும்.

Memento - இதைப்பற்றி சொல்லவே வேண்டாம். Pulp fiction போன்று திரைக்கதையில் ஒரு மைல்கல். reverse chronology ,ஒரு விடை, ஒரு புதிர் என வியப்பில் ஆழ்த்தும்.

Insomnia - Norway நாட்டுப்பட ரீமேக், ஒரிஜினல் கதையை மாற்றாமல், கதையைவிட கதாபாத்திர வடிவமைப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும்.

Batman begins - இந்தப்படத்திற்குப் பிறகு தான், உலக அளவில் பிரபலமானார் . இதுவரை திரையில் பார்க்காத , ஒரு வித்தியாசமான super hero characterization .

Prestige - நான் லினேயரில் , மேஜிக் பற்றிய magical movie.

Dark Knight - The joker.

Inception - கதையும், இறுதி 45 நிமிடங்களும
film making ன் உச்சம்.

Dark Knight rises - வழக்கம்போல mind blowing வசனஙகள் , characterization இருந்தபோதும், mixed reviews...
(My slot is over)
HAPPY BIRTHDAY MY FAVOURITE CHRIS...!

The cell (2000) ;

The cell (2000) ;


psychological serial killing movie .

இதுவரைக்கும் திரையில் பார்த்த 999 சீரியல் கில்லிங் மூவிக்கும் , இந்தப்படத்துக்கும் எந்தவொரு பெரிய வித்யாசமும் இல்ல, அதே க்ளிஷேவான கொலைகள், MO (ஏறக்குறைய) , ரீசன், எல்லாமே... ஆனா இதுவரை இந்த வகை ஜெனரில் பாக்காத ஒரு விஷயம், இதன் surrealistic making...

ஆரம்பத்திலேயே சொன்ன மாதிரி கதைய விவரிச்சு சொல்ற அளவுக்கு ஏதுமில்ல,எல்லாம் ஏற்கனவே பாத்ததுதான்.

ஒரு ஊரு, ஒரு சீரியல் கில்லர் , ஆனா  MO, பொண்ணுங்கள ஒரு கண்ணாடித் தொட்டியில போட்டு கொஞ்சம் கொஞ்சமா தண்ணிய நெரப்பிக் கொல்றது (ஏறக்குறைய 48 மணி நேரத்துல..).அப்படி ஒரு பொண்ண அந்தத் தொட்டியில போட்டு கொல்லப்போகும் போது இவரு கோமா'க்கு போயிடறாரு, கில்லரப் புடிச்ச போலீஸ்க்கு 48 மணி நேரத்துல சாகப்போற அந்தப்பொண்ணு எங்க இருக்குன்னு எப்படித் தெரிஞ்சிக்கறது..?!.

இங்க தான் சைக்காலஜிஸ்ட் Jenifer Lopez வர்றாங்க, ஒரு virtual டெக்னாலஜி மூலமா மனித மூளைக்குள்ள போய் அவங்க சைக்காலஜிக்கல் பிரச்சனைகள குணப்படுத்தற child psychologist .
அதே முறையைப் பின்பற்றி சாகப்போற அந்தப்பொண்ணக் கண்டுபுடிக்க,கொலைகாரன் மூளைக்குள்ள போறாங்க Jenifer...
சாகப்போற அந்தப்பொண்ண காப்பாத்த முடிந்ததா..?

கொலைகாரன் மூளைக்குள்ள போன Jenifer என்ன ஆனாங்க..?

பாலைவனத்துல வித்யாசமான பிண்ணனி இசையுடன், ஒரு பெண் குதிரையில் வர்ற மாதிரி படம் ஆரம்பிக்கும் போதே , படம் வழக்கத்துக்கு மாறா இருக்குற மாதிரி தோணும்.
ஆனா போகப்போக படத்தோட cinematography & music நாமும் எதோ ஒரு surrealistic painting உள்ள மாட்டிக்கிட்ட feel கொடுக்கும்.வேகமாக மாறும் காட்சிகளும், interior art direction ம் , ஏதோ ஒரு Art house'க்குள்ள இருக்குற feel கொடுக்கும்.நல்ல மேக்கிங்...
கடைசியா இந்தப்படத்த பாக்க இன்னொரு காரணம் , இந்தப்பட இயக்குனர் ஒரு இந்தியர் Tarsem Singh.


http://www.youtube.com/watch?v=PnqUH0IKLok

Now you see me (2013) ;


Now you see me (2013) ;



ஒரு செம்மையான magical heist thriller .

அமெரிக்காவின் நான்கு மூலைகளிலிருந்து, ஒரு hypnatist உட்பட நான்கு சிறந்த மேஜிக் நிபுணர்கள், ஒரு மர்ம மனிதனால் தேர்ந்தெடுக்கப்பட்டு ,ஒன்றுகூடுகின்றனர்.

இது நடந்து சரியாக ஒரு வருடத்திற்குப் பிறகு அந்த நான்கு பேரும் லாஸ் வேகஸில் ,The four horsemen என்ற பெயரில் ஒரு மேஜிக் ஷோ நடத்துகிறனர்.
அந்த மேஜிக் ஷோ'விலேயே ஒரு பேங்க்'கை கொள்ளையடிப்பதாகக் கூறிவிட்டு, பார்வையாளர்களில் இருந்து random'மாக ஒரு ஆளைத் தேர்ந்தெடுக்கின்றனர்.
மேடையிலேயே அவருக்கு teleportation helmet'ஐ அணிவித்து , ஒரு சில நொடிகளில் , ஃபிரான்ஸிலுள்ள ஒரு பேங்க்'கிற்கு அனுப்பி (!), அங்குள்ள பணத்தை ஒரு vaccum air duct system மூலமாக கடத்தி , ஒரு சில நிமிடங்களில் லாஸ் வேகஸிலுள்ள அந்த ஆடிட்டோரியத்திலுள்ள பார்வையாளர்களுக்குத் தருகின்றனர் (!).

மேஜிக் ஷோ'விற்கு வந்த பார்வையாளர் ஒருவர் ஒருசில நொடிகளில் ஃபிரான்ஸ் சென்றதெப்படி..?
ஃபிரான்ஸ் பேங்க்'கிலிருந்த பணம் ஒரு சில நிமிடங்களில் லாஸ் வேகாஸிற்கு வந்ததெப்படி...?!
That's magic...
கொள்ளை எப்படி நடந்தது என மண்டையைப் பிய்த்துக் கொள்ளும் FBI , நால்வரையும் கைது செய்து விசாரித்தும் க்ளூ கிடைக்காமல் திணறுகிறது.

ரிலீஸ் செய்யப்பட்ட. நால்வரும் , அடுத்த ஷோ'விற்கு ரெடி ஆகின்றனர். கூடவே FBI யும்...

FBI 's tracking device , security எல்லாவற்றையும் முட்டாளாக்கி விட்டு , இந்த முறையும் புத்திசாலித்தனமாக அவர்கள் நினைத்ததை சாதித்து விட்டுத் தப்பிக்கின்றனர்.

இந்த சூழ்நிலையில் FBI'க்கு வெளியில் ஐந்தாவதாக ஒரு Horseman இருப்பது தெரியவரும் போது மூன்றாவது ஷோ ஆரம்பிக்கிறது .

FBI யால் மூன்றாவது ஷோ'வைத் தடுத்து நிறுத்த முடிந்ததா..?
யார் அந்த 5th Horseman..?

வழக்கமான மேஜிக் ஷோ'வில் பார்வையாளர்கள் முட்டாளாக்கப் படுவார்கள், ஆனால் , இந்தப்படமே ஒரு மேஜிக், பார்க்கும் நம்மை முட்டாளாக்குகிறது.ஒருமுறை , இருமுறை அல்ல, ஒவ்வொரு முறையும்...
எவ்வளவு தூரம் நாம் சிந்திக்கிறோமோ அவ்வளவு தூரம் முட்டாளாக்கப் படுகிறோம்
பெரிய பெரிய லாஜிக் ஓட்டைகள் இருந்தாலும் அதையெல்லாம் சிந்திக்க விடாமல் செய்கிறது படத்தின் excellent எடிட்டிங் , கேமராவைப்போலவே குறிப்பிடத்தக்க இன்னொரு அம்சம் துள்ளலான பிண்ணனி இசை.

வசனம், காட்சியமைப்பு முதற்கொண்டு ,ஆங்காங்கே prestige',ஐ நினைவு படுத்தினாலும்,அள்ளித்தெளிக்கப்பட்ட non linear திரைக்கதையும்,அற்புதமான இயக்கமும், அருமையான casting ம் கண்டிப்பாகப் பார்த்தே தீர வேண்டிய படமாக மாற்றுகின்றது.
strongly recommended...


http://www.youtube.com/watch?v=KzJNYYkkhzc

Friday, December 13, 2013

The prestige & Now you see me ;

The prestige &
Now you see me ;



The prestige , Now you see me ரெண்டு படத்தையும் பாத்தவங்களுக்கு அந்த ரெண்டு படத்துக்கும் இடையே உள்ள ஒற்றுமைகள் தெரியும்.ofcourse , The prestige படம் கூட வேற எந்தப் படத்தையும் compare பண்ண முடியாது தான்.
ஆனா ரெண்டு படமும் மேஜிக்'கை அடிப்படையாகக் கொண்ட படங்கள் , non linear editing ( though now u see me , slightly non linear) என்பதையும் தாண்டி , The prestige படத்தோட பாதிப்பு Now you see me 'ல நல்லாவே தெரியும்.

என்னைப்பொறுத்த வரை , Now u see me படத்தை prestige படத்தின் தொடர்ச்சியாகவே பார்க்கிறேன்.
அதாவது, இரண்டு மெஜிஷியன்களுக்கு இடையே தொழிற்போட்டி காரணமாக இறந்த (The prestige ) ஒருவனுடைய மகன் , வளர்ந்து, எஞ்சியவனைப் பழி வாங்குவது (Now u see me).

ரெண்டு படத்தின் அடி நாதமும் obsession of profession' என்ற விஷயத்தையே அழுத்தம் திருத்தமாக சொல்கிறது.
அதாவது இரண்டு
முக்கிய கதாபாத்திரங்கள் , மேஜிக்'கை வெறும் தொழிலாகப்பார்க்காமல் வாழ்க்கையாகப் பார்த்ததால் ஏற்படும் விளைவுகளைப் பற்றியே படத்தின் அடுத்தடுத்த காட்சிகள் அமைக்கப்பட்டு இருக்கும். (இரண்டு
படத்திலுமே Chinese magician Chung ling soo பற்றிய குறிப்பு வருகிறது. )



இரண்டு படங்களும் மேஜிக் பற்றிய அறிமுகத்துடனே, குறிப்பாக மேஜிக்'ல் பார்வை ஒருவனை எப்படி ஏமாற்றும் என்பதைப்பற்றிய விளக்கத்துடனேயே ஆரம்பிக்கும்.
Are u watching closely?

Come in close. Closer...

Robert angier'ஐப் போலவே ,Four horsemen'ம் , தங்களது மேஜிக்'கை ஆரம்பிக்கும் போது சொல்லும் ஒரு வாக்கியம் இந்த மேடையில் நடக்க இருப்பது , உலகில் வேறு எங்கும் நடக்கவில்லை என்பதே...
இரண்டு படங்களும் Transportation என்ற விஷயம் தான் அடிப்படை அங்கே Transported man , இங்கே Transported money , ஆனால் இதற்கான விளக்கம், prestige 'ல் வசனமாகவும், Now you see me'ல் காட்சியாகவும் சொல்லப்பட்டிருக்கும். மேலும் ரெண்டு படங்களிலும் ஆங்காங்கே twist and turns இருந்தாலும், அதற்கான விளக்கம்...?!

Now you see me சறுக்குவது இங்கே தான். Prestige படத்தின் Transported ன் விளக்கம் ,லாஜிக் கேள்விகளை ஓரளவுக்கு manage செய்தாலும், Now you see meன் லாஜிக் தான் இதனை ஒரு onetime see பாப்கார்ன் படமாக மாற்றுகின்றது .

இரண்டு படத்திலுமே இறுதியில் சிறையில் இருப்பவர்களை இரண்டு Rivalryகளும் சந்திக்கும் காட்சி வரும். பொதுவாக சொல்லும் வார்த்தைகள் Four walls, look in the face . இதனுடன் காலில் chain மாட்டுவது, water tank escape என ஆங்காங்கே prestige'ஐ நினைவு படுத்தும் பல சீன்கள்.

எனக்குத்தெரிந்து Prestige'க்கு முன்னும், பின்னும் மேஜிக் பற்றிய படம் முழுமையாக ஏதும் வரவில்லை, (Illusionist பரவாயில்லை) , விரல் விட்டு எண்ணக்கூடிய கேரக்டர்களை வைத்துக்கொண்டு, Prestige செய்த மேஜிக்'கை இன்னும் எந்தப்படமும் செய்யவில்லை,
ஆனால் மேஜிக் படங்களை வரிசைப் படுத்தினால் Prestige படத்திற்கு அடுத்து
Now you see me ம் ஒரு முக்கிய இடம் பெறும் அது மட்டும் உறுதி....

Masters of Horror : Imprint : (2006) 18+

Masters of Horror : Imprint : (2006) 18+



காணாமல் போன தனது காதலியைத் தேடி ஒரு விசித்திரமான தீவுக்கு வரும் ஒரு அமெரிக்கனுக்கு ஒரு இரவில் , ஒரு பெண் மூலமாக கிடைக்கும் அனுபவங்களே படத்தின் கதை.

தொலைக்காட்சிக்காகத் தயாரிக்கப்பட்ட ஒரு Tele film. இயக்கம் Takhishi Mike.
படம் எப்படி இருக்கும்னு உங்களுக்கே தெரியும். கண்டிப்பாக இந்தப்படம் 18+ .

படத்தின் திரைக்கதை ஏறக்குறைய Roshomon ஐ நினைவுபடுத்தினாலும், அந்தப்படத்திற்குப் பக்கம் கூட வர முடியாது. படம் வெறும் ஒரு மணி நேரம் தான் , ஆனால் அந்த ஒரு மணி நேரத்திலேயே gore, sadism, torture, incest, violence , shocking என எல்லாவற்றையும் தொட்டுச் செல்கிறது .இதனாலேயே இந்தப்படம் கடைசி நேரத்தில் Tele film'மாக ஒளிபரப்பப்படவில்லை.

பார்த்தே ஆக வேண்டிய படம் கிடையாது , ஆனால் Shock value Gore film , பாக்கணும்னு நெனைச்சா பாக்கலாம்.

Faces of death : (1978) (English documentary )

Faces of death : (1978) (English documentary )





எச்சரிக்கை- முதலிலேயே சொல்லிவிடுகிறேன், இந்த டாக்குமெண்டரி கண்டிப்பாக , கண்டிப்பாக, பெண்களுக்கோ, 20 வயதிற்கு குறைவானவர்களுக்கோ ,இன்னபிற இளகிய மனம் கொண்டவர்களுக்கோ, அல்ல... அப்பேர்ப்பட்டவர்கள் இதைப்படிக்கக் கூட வேண்டாம்.

காட்சி-1
வரிசையாக மாடுகள் விரட்டப்படுகின்றன, முதலில் சென்ற மாட்டின் தலை, ஒரு சதுரமான துளையினுள் நுழைக்கப்படுகிறது திமிறும் மாட்டின் தொண்டை ஒரு கத்தியால் அறுக்கப்பட, ரத்தம் பீறிட்டு தரையை நனைக்க, மாடு வெறித்த விழிகளுடன் தரையில் சரிகிறது .

காட்சி-2
ஒரு மூடிய குடோனுக்குள் விடப்பட்ட ஆடுகளில் ஒரு சில தேர்ந்தெடுக்கப்பட்டு, உயிருடன் ,காலில் கயிறு கட்டி, தலைகீழாகத் தொங்க விடப்படுகின்றன , தொங்க விடப்பட்ட ஆடுகளனைத்தும் , நொடிப்பொழுதில் கத்தியால் கழுத்தில் குத்தப்பட, ரத்தம் பீய்ச்சியடிக்க , சில நிமிடங்களில் உயிரற்ற உடலாக தொங்குகிறது.

காட்சி-3
நான்கு பேர் ஒரு ஹோட்டலில் பெல்லி டான்ஸ் பார்த்துக்
கொண்டிருக்கின்றனர்.
உணவுவேளை, உயிருடன் உள்ள ஒரு குரங்குக்குட்டி கொண்டு வரப்படுகிறது. உணவு மேசை நடுவே உள்ள திறப்பில் , குரங்குக்குட்டியின் தலை மட்டும் வெளியே தெரியும்படி வைக்கப்படுகிறது. அசைய முடியாமல் ,மரண பயத்தில் அலறும் குரங்குக்குட்டி , ஒரு சிறிய தடியால் தலையில் தொடர்ந்து தாக்கப்பட்டு பரிதாபமாக சாகிறது. இறந்த குரங்குக்குட்டியின் தலை பிளக்கப்பட்டு, அதன் மூளை பச்சையாகவே உண்ணப்படுகிறது (?!) .

இன்னும் நாய்சண்டை, காளை சண்டையில் கொடூரமாக இறந்த மிருகங்களைத் தொடர்ந்து, பார்வை, மெதுவாக மனிதர்கள் பக்கம் திரும்புகிறது.

அறுவை சிகிச்சை , பிரேதப் பரிசோதனை, விபத்து, தற்கொலை, கொலை , மரண தண்டனை, போர்,என அனைத்து வீடியோக்களுக்கும் எந்த சென்சாரும், ஒளிவுமறைவுமின்றி,காட்டப்படுகிறது .

இவைகளை இணைக்கும் பொதுவான ஒன்று, 'Death'.

46 நாடுகளில் தடை செய்யப்பட்ட இந்தப்படம் , பார்ப்பவர்களுக்குக் கடுமையான மன உளைச்சலைத் தரவல்லது, நான் மிகைப்படுத்தவில்லை என்பது இதைப்பார்த்தால் உங்களுக்கே புரியும்.
ஏனென்றால் , இது வன்முறை நிறைந்த படமோ , அல்லது Gore genre ல் எடுக்கப்பட்ட படமோ அல்ல. ஓரிரண்டைத்தவிர அனேகமான வீடியோக்கள் நிஜமானவை.
ஆனால் படத்தின் Gloomyness'ஐ குறைத்து, எரிச்சலைக் கிளப்புவதே இதன் இசை தான். ஆனால் அதுகூட இதன் இருண்மையைக் குறைக்கத் திட்டமிட்டு செய்தது போலதான் தோன்றுகிறது .
ரத்தமும் , சதையுமான மனிதன் கண்முன்னே சாவதைப் பார்ப்பதில் உங்களுக்கு எந்த தயக்கமும் இல்லையெனில் கண்டிப்பாகப் பார்க்கலாம். 

Alexandra's project (2003) : 18+

Alexandra's project (2003) : 18+


ஸ்டீவ்'வுக்கு அன்று பிறந்த நாள் , தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் பிறந்த நாளைக் கொண்டாட ஆபீஸிலிருந்து மாலை வீட்டிற்கு வரும் ஸ்டீவ், வீடு கொண்டாட்டத்திற்கான எந்த அறிகுறியும் இல்லாமல் வெறிச்சோடிப் போயிருப்பதைப் பார்க்கிறான். வீட்டில் மனைவி, குழந்தைகளும் இல்லை, குழம்பும் அவன் கண்ணில் படுகிறது Play me என்னும் குறிப்புடன் அந்த வீடியோ கேஸட் . சரி பார்ப்போமே என்ற எண்ணத்துடன் அந்த வீடியோவைப் பார்க்க ஆரம்பிக்கிறான்.

முதலில் மனைவி, குழந்தைகளின் பிறந்த நாள் வாழ்த்துக்களுடன் ஆரம்பிக்கும் காட்சி, மெதுவாக மாறுகிறது .அது....!
நீங்களே பாருங்க.

எதோ Family drama போல சாதாரணமாக ஆரம்பிக்கும் படம், மெதுவாக Melodrama 'வாக மாறி ஒரு கட்டத்தில் Psychological Thriller'ராக மாறுகிறது . கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய படம் , குறிப்பாக திருமணமான ஆண்கள் , ஏன் இதை சொல்றேன்னு படம் பாக்கும் போது, உங்களுக்கே தெரியும். .


http://www.youtube.com/watch?v=Bzh3U-jYEXY

Salt N pepper :(Malayalam)

Salt N pepper :(Malayalam)



உலகத்தில் தீராதது , பசி, காதல் மட்டும் தான் என்ற வைரமுத்து வரிகளின் படி , உணவுகளின் ஊடாக ,மலையாள சினிமாவிற்கே உரிய இயல்பான காமெடியும், யதார்த்தக் காதலும் கைகோர்த்த மற்றுமொரு ஒரு அழகிய காதல் கதை தான் Salt N' pepper .

தமிழ் சினிமாவை காமெடிப்பேய் பிடித்து ஆட்டுவது போல, மலையாள சினிமாவிற்குத் தற்போது காதல் சீசன் போல...
தட்டத்தின் மறையத்து , அன்னயும், ரசூலும் வரிசையில் Salt N pepper.
கதை..?
ஸ்பெஷலாக சொல்வதற்கு ஏதுமில்லாத, ஏற்கனவே பலமுறை பார்த்து சலித்த ஆள்மாறாட்டக் கதை தான் என்றாலும், போரடிக்காத திரைக்கதையால் படம் புதிதாகத் தெரிகிறது .

இரண்டாம் பாதியில் ஒரு நல்ல சைக்கலாஜிக்கல் திரில்லராக மாற வாய்ப்பிருந்தும், அதற்கெல்லாம் இடம் கொடுக்காமல் , ஆர்ப்பாட்டமில்லாத
, இயல்பான திரைக்கதையால் ஈர்க்கிறது இந்தப்படம்.
Characterization ம், கதாபாத்திரத்திற்கேற்ற நடிகர்களும் , படத்தின் பெரிய பிளஸ், குறிப்பாக மனு'வாக நடித்த ஆஸிஃப் மற்றும் அந்த சமையல்காரர் , சரியான தேர்வு.

காட்சிகளால் நகரும் பிரம்மாண்டமான கதைகளுக்கு திரைக்கதை அமைப்பதை விட , இந்த மாதிரி சாதாரணக் கதைகளுக்கு திரைக்கதை அமைத்து , சின்னச்சின்ன சம்பவங்களால் ,தொய்வடையாமல் படத்தைக் கொண்டு செல்வதில் தான் இயக்குனரின் திறமை வெளிப்படும், இதை மலையாள சினிமா சிறப்பாக செய்வதால், இந்தப்படம் உட்பட சுமார் ஆறு, ஏழு படங்களுக்கு மேல் தமிழில் மறு உருவாக்கம் செய்யப்படுகின்றன . மொத்தத்தில் , பார்க்க வேண்டிய படம் , இந்த Salt N pepper.


http://www.youtube.com/watch?v=zbpFUAQvJTA

Batman begins : (special post)


Batman begins : (special post)



நோலனின் படங்களின் வசனங்கள் பற்றி எழுத ஆரம்பித்தால் அது மெகா சைஸுக்குப் போய்விடும், உதாரணத்திற்கு ஒன்றை மட்டும் பார்ப்போம்.



Batman begins படத்தின் வசனங்கள் பற்றி எல்லோருக்குமே தெரியும். வசனங்கள் ஒவ்வொன்றும் தனிச்சிறப்பு வாய்ந்தவை.
எனக்கு மிகவும் பிடித்த ஒரு வசனம், நான் அடிக்கடி பார்க்கும் ஒரு சீன், பார்க்கும் போதெல்லாம் என்னை நெகிழ வைக்கும் வசனம்.
Batman begins படத்திலிருந்து ...

Bruce Wayne தன்னுடைய Batman என்னும் அடையாளத்தை மறைத்து, தன் மீது யாருக்கும் சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக , தன்னை ஒரு பணக்கார play boy 'யாகக் காட்டிக்கொள்வார். இந்த சூழ்நிலையில் ,கோதம் நகரின் முக்கியஸ்தர்கள் கூடி இருக்கும் ஒரு நட்சத்திர ஹோட்டலில் எல்லோர் முன்னிலையிலும் பெண்களுடன் நீச்சல் குளத்தில் விளையாடி விட்டு , ஹோட்டலை விட்டு வெளியே வரும் 
சமயம், தன்னுடைய பால்ய வயதிலிருந்து மானாசீகமாகக் காதலிக்கும் Rachel'ஐ நீண்ட நாளைக்குப் பிறகு இந்த மாதிரி நிலையில் பெண்களுடன் சந்திக்கும் ஒரு இக்கட்டான சூழ்நிலை.அப்போது வரும் வசனங்கள்.....
இதனால் தான் , இதனால் தான் நோலனின் படங்கள் மற்ற படங்களிலிருந்து வேறுபடுகின்றன . கவனித்துப்பார்த்தால் தெரியும்.

உடையெல்லாம் நனைந்து, பெண்களுடன் நிற்கும் அவனிடம் Rachel,

What u r doing ? 
எனக்கேட்க , இப்போது Wayne ,தான் ஊருக்காகத்தான் இந்த மாதிரி நடிக்கிறேன் என வெளிப்படையாக சொல்ல முடியாத இக்கட்டான நிலை, என்ன சொல்வதென தடுமாறி, 

Rachel... all of... all this, its... its not me... inside , I am.. I am more...

என்று தடுமாற, அப்போது Rachel, மனதிலுள்ள ஆற்றாமையை மறைத்துக் கொண்டு, வலிய வர வைத்த புன்னைகையுடன் சொல்வாள்,

Bruce... deep down u may still be that great kid u used to be, 
BUT, ITS NOT WHO U R UNDERNEATH... ITS WHAT U DO THAT DEFINES U.
என்று சொல்லிவிட்டு, நகர்ந்து விடுவாள்.
இதனுடன் அந்தக் காட்சி முடிந்துவிடும்.


நிற்க, 
க்ளைமேக்ஸில் ஒரு காட்சி, Wayne , Batman'னாக மாறி,
வெறிபிடித்த மக்களிடமிருந்து Rachel 'ஐயும், அந்தச் சிறுவனையும் காப்பாற்றுகிறான். அப்போதும் Rachel'க்கு Wayne தான் Batman என்பது தெரியாது,
இருவரையும் காப்பாற்றிவிட்டு, கிளம்பும் அவனிடம் ,Rachel,
Wait...u could die, Atleast tell me ur name .
என்பாள்.
மெதுவாக அவளை நோக்கித்திரும்பும் Batman,
IT'S NOT WHO I AM UNDERNEATH... BUT WHAT I DO THAT DEFINES ME.
என்று முன்பு அவள் சொன்ன அதே வசனத்தை சொல்லிவிட்டு செல்கிறான்.
அப்போதுதான் Rachel'லுக்கும் உண்மை தெரிய ,
Bruce...?! 
என்று சொல்லும் சமயம், முதன்முறையாக , Batman theme ஒலிக்கிறது . 

இந்த வசனமும் , காட்சியமைப்பும், இசையும் ஒன்றுக்கொன்று இணைந்து, முதுகுத்தண்டு சில்லிடும் உணர்வைத்தரும். இதனாலேயே நோலனின் படங்களின் திரைக்கதைகள் தனித்துவம் பெறுகின்றன . அதாவது சம்பந்தமில்லாத இரண்டு காட்சிகளையோ, வசனங்களையோ எதிர்பார்க்காத இடத்தில் இணைத்தல்...
இதற்கு நோலனின் படங்களிலிருந்து நிறைய உதாரணங்கள் சொல்ல முடியும்.
நோலனின் படங்களை கவனமாகப் பார்த்தவர்களுக்கு(!!) இது நன்றாகத் தெரியும்.

Mad Detective : (chinese) 2007

Mad Detective : (chinese)
2007



லூயிஸ் புனுவலின் Obsure object of Desire படத்தில் , ஒரு பணக்காரக் கிழவர் , ஒரு ஏழை இளம்பெண்ணை அடைய முயற்சி செய்வார். அந்தப்பெண்ணும் ஒரு முறை அவரைக் காதலிப்பது போலவும், மறுமுறை அவரை வெறுப்பது போலவும் மாறி மாறிப் பேசி அவரை அலைய விடுவாள். இதில் என்ன புதுமை என்றால் , அந்தப்பெண் அவரிடன் அன்பாகப் பேசும் போது ஒரு நடிகை, அவரை வெறுக்கும் போது அந்தக் கதாபாத்திரத்திற்கு வேறு நடிகை என இருவேறு நடிகைகளை ஒரே கதாபாத்திரத்தில் நடிக்க வைத்து இருப்பார் புனுவல்.


அதாவது ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒன்றுக்கொன்று எதிரெதிரான இரண்டு வேறு வேறு குணாதிசயங்கள் உள்ளன என்பதை காட்சியாக விளக்க அந்த முறையைப் பயன்படுத்தி இருப்பார் புனுவல்.

ஒவ்வொரு தோற்றத்தையும் , செய்கையையும் வைத்து அவனுடைய குணாதிசயம் இதுதான் என்று எடை போடும் நாம், அவனுடைய அடி மனதின் உண்மையான உருவத்தை கவனிக்கத் தவறி விடுகிறோம் . அப்படி ஒருவனால் , பிறர் ஆழ்மனங்களின் personality'களைக் காண முடிந்தால் , அதுவும் அவன் ஒரு டிடெக்டிவ்'வாக இருந்தால், இதுதான் Mad Detective படத்தின் ஆரம்பப்புள்ளி .

Bun' ஒரு மனப்பிறழ்வு அடைந்த , சற்றே மறை கழண்ட ஒரு புத்திசாலி (!) டிடெக்டிவ் .
அதாவது உயரதிகாரி Retirement'க்கு தனது காதையே அறுத்து gift கொடுக்கும் அளவுக்கு ஒரு புத்தி பேதலித்த மனிதர்.

கட்டாய ஓய்வுக்குப்பிறகு,மனைவியுடன் வீட்டில் இருக்கும் அவரை ஹோ' என்னும் ஒரு டிடெக்டிவ் சந்திக்கிறார்.

சுமார் பதினெட்டு மாதங்களுக்கு முன்பு, Wong, Chi-wai என்னும் இரண்டு காவலர்கள் காட்டிற்குள் ஒரு குற்றவாளியைத் துரத்திச்செல்கையில்
, Wong தனது துப்பாக்கியுடன் காணாமல் போகிறார் . அதைத்தொடர்ந்து , பல இடங்களில் கொள்ளை நடக்கிறது. கொள்ளை, இரண்டு இடங்களில் கொலையில் முடிகிறது . சம்பவ இடங்களில் கிடைத்த தோட்டாக்கள் , காணாமல் போன Wong துப்பாக்கியிலிருந்து சுடப்பட்டவை எனத்தெரிய வருகிறது . பல மாதங்களாக விசாரித்தும் எந்தத்தடயமும் கிடைக்கவில்லை , இந்தக்கேஸைத் துப்பறிய உதவுமாறு கேட்க , investigation ஆரம்பமாகிறது .
Bun தனக்கே உரிய முறையில் , தனது வேலையை ஆரம்பிக்கிறார்.

டிடெக்டிவ் Bun ஏன் இப்படி இருக்கிறார் என்பதற்கு விளக்கம் எந்த இடத்திலும் சொல்லப்படவில்லை. எனினும் அது ஒரு குறையாகத் தெரிவதில்லை. சற்றே குழப்பும் வகையில் திரைக்கதை , அதாவது கதாபாத்திரங்களின் inner personality , மேலே சொன்னது போல ஒரே கதாபாத்திரத்திற்கு வெவ்வேறு நடிகர்கள் , இதைப்புரிந்து கொண்டால் no confusion .
ஆனால் டிடெக்டிவ் bun சொல்வது போலவே நடப்பதால், பரபரப்பு சற்றே மிஸ்ஸிங். அதாவது என்ன நடந்தது / நடக்கும் என்பதை ஆரம்பத்திலேயே சொல்லி விடுவதால், திரைக்கதை கொஞ்சம் டல்'லடித்த feeling . ஆனால் , இது நிறைய படவிழாக்களில் Best Screenplay award வாங்கியிருக்கிறது.
பார்க்க வேண்டிய படம்.

http://www.imdb.com/title/tt0969269/

Witness for the prosecution : (1957)

Witness for the prosecution : (1957 )





தனிப்பட்ட முறையில் எனக்கு (ஏறக்குறைய ) Film noir காலகட்டத்தில் வந்த கருப்பு/வெள்ளைப் படங்களின் மீது எப்போதும் ஒரு தனிக்கவனம் உண்டு. எந்த ஜெனராக இருந்தாலும், சொல்ல வந்த விஷயத்தை பொட்டில் அடித்த மாதிரி தெளிவாக சொல்வதாலும், கிராஃபிக்ஸ் தலைவலி எல்லாம் இல்லாமல், திரைக்கதை வசனத்தை மட்டுமே நம்பி எடுக்கப் படுவதாலும், B/W படங்கள் என்றுமே பெஸ்ட், அது எந்த மொழியாக இருந்தாலும் சரி.

அந்த வகையில் நீண்ட நாட்களாக HD யில் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டு , பார்க்காமலே இருந்த இந்தப்படத்தை நேற்று தான் பார்க்க முடிந்தது.படத்தைப் பற்றி ஒரு வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால், 'exxxcellllentt...!!'

படம் முடிந்து, மீண்டும் இயல்பு நிலைக்கு வர பல நிமிடங்கள் பிடித்தது.
இன்னும் இதன் பாதிப்பிலிருந்து முழுமையாக வெளிவர முடியவில்லை.
one of the best investigation film I ve ever seen in my recent days..!!

இதே ஜெனரில் வெளிவந்த A separation , 12 Angry men படங்களைப் பார்க்கும் போது இதே உணர்வு வந்த போதும், இந்தப் படம் தரும் உணர்வு, டைப் பண்ண முடியாதது. felt like a roller coaster ride.

அகதா கிறிஸ்டியின் மேடை நாடகத்தை அடிப்படையாகக் கொண்ட courtroom thriller . இயக்கம் Billy Wilder.
பொதுவாகவே நீதிமன்ற வழக்குகளை அடிப்படையாகக் கொண்ட படங்களில் வசனம் ரொம்ப வலுவாகவே இருக்கும் , இந்தப்படம் அதற்கு இன்னொரு உதாரணம் .
(கொஞ்சம் dramatical'ஆக இருந்த போதும்) . வழக்கமான கதைதான் , ஒரு கொலை, அதனை அடிப்படையாகக் கொண்ட வாதப்பிரதிவாதங்கள்.
ஆனால் இந்த அளவுக்கு சிறப்பான ஒரு படத்தை சமீபத்தில் எங்கும் பார்த்ததாக நினைவில்லை.

குற்றம் சாட்டப்பட்டவர் , நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் போது, குற்றம் நடந்ததற்கு முன்பு அவர் செய்த சின்ன, சின்ன செயல்கள் கூட வழக்கறிஞரின் வாதத்திறமையால் , அவருக்கு சாதகமாகவோ பாதகமாகவோ மாறுவது , கோர்ட் ரூம் படங்களின் திரைக்கதைக்கே உரிய தனிச்சிறப்பு . இந்தப்படத்திலும் புத்திசாலித்தனமாக திரைக்கதை அமைக்கப்பட்டு , சின்னச் சின்ன detail கூட அற்புதமாகப் பயன்படுத்தப் பட்டுள்ளது . படத்தின் climax, கடைசி பத்து நிமிடம் damn good....

ஒரு பாடல் காட்சிக்காக ஏழு கோடி செலவு செய்து, ஆறு நாடுகளுக்கு செல்லும் இயக்குனர்கள் இந்தப்படத்தைக் கண்டிப்பாகப் பார்க்க வேண்டும், ஏன்னா, மொத்தப் படத்துக்கும் , ரெண்டே லொக்கேஷன் தான், Wilfred s office and courtroom .

ஒருவேளை நீங்களும் , இன்னும் இந்தப் படத்தை பாக்கலைன்னா , மொதல்ல கண்டிப்பா பாருங்க, strongly recommended....

http://www.youtube.com/watch?v=M0EDUuvuIks

Wednesday, December 11, 2013

SMOCKIN' ACES :

SMOKIN' ACES : (english)





ஒரு சூப்பரான கேங்ஸ்டர் படம். 

La cosa Nostra என்னும் மாஃபியாக்கும்பல் முழுமையாக வேட்டையாடப்பட்ட பிறகு, அதில் எஞ்சிய தலைவன் Primo sparazza 'விற்கெதிராக ஆதாரங்களைத் திரட்டுகிறது  FBI 

FBI ன் முக்கிய சாட்சி, Buddy Aces Israel . லாஸ் வேகஸின் ex-stage performer, மாஃபியா , கேங்ஸ்டர்களின் இடைத்தரகனாக இருந்து, Sparazza'வால் வளர்த்து விடப்பட்டு, அவருக்கே தற்போது போட்டியாக உருவாகியிருப்பவன்.

Sparazza வின் வீட்டை உளவு பார்க்கும் ஒரு FBI உளவாளியால் , FBIக்கு ஒரு முக்கியத்தகவல் தெரிய வருகிறது . sparazza'வை சந்திக்கும் ஒரு Swede அடியாளிடம், sparazza , Israel ' ன் இதயத்தைக் கொண்டு வருபவருக்கு ஒரு மில்லியன் டாலர் தருவதாக சொல்வதே அது.





விஷயம் வெளியே கசிய, ஒரு மில்லியனுக்கு ஆசைப்பட்டு, இரண்டு பெண் contract killers, மூன்று ex cops, பணத்திற்காக எதையும் செய்யும் ஒரு mercenary torture expert , மூன்று psycho brothers , ஒரு expert assassin என தனித்தனியாக ஒரு கும்பலே Israel'ன் இதயத்தை குறி வைத்து, தற்போது Israel தங்கியிருக்கும் Nomad என்னும் ஹோட்டலை நோக்கிக்கிளம்புகிறது . இவர்களிடமிருந்து Israel ஐக் காப்பாற்ற FBI இரண்டு ஏஜண்டுகளை அனுப்ப, ஆட்டம் ஆரம்பமாகிறது.

படம் மேக்கிங்' தாறுமாறு . நிறைய்ய கேரக்டர்களுடன் , amazing character intro with stylish making. திரைக்கதை செம்மையாக அமைக்கப்பட்டு , ஆங்காங்கே வரும் twist & turns படத்தை இன்னும் interesting'காக மாற்றுகிறது. எடிட்டிங்'கும், இசையும் OMG ... 
குறிப்பாக கடைசி அரைமணி நேரம், hell of the thrill..!!!
க்ளைமேக்ஸ் முடிந்ததும் ஒரு நல்ல படத்தைப்பார்த்த திருப்தி இருந்தது. வேறென்ன வேண்டும்..?!
இதுல ரெண்டாவது பார்ட்'டும் இருக்கு,
Tonight gonna watch.

ஆனா படத்தைப் பார்த்து முடித்தவுடன் தோன்றியது என்னவென்றால் , எந்த best ganster பட லிஸ்டிலுமே இந்தப்படத்தின் பெயரைப் பார்த்ததில்லையே , ஏன்..?!
(ஒருவேளை நமக்கு மட்டும் தான் பிடிச்சிருக்கோ..?! )
கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய படம். 


trailer கொஞ்சம் மொக்கை...??

 http://www.youtube.com/watch?v=bRBLay20LBY