Friday, December 13, 2013

Salt N pepper :(Malayalam)

Salt N pepper :(Malayalam)



உலகத்தில் தீராதது , பசி, காதல் மட்டும் தான் என்ற வைரமுத்து வரிகளின் படி , உணவுகளின் ஊடாக ,மலையாள சினிமாவிற்கே உரிய இயல்பான காமெடியும், யதார்த்தக் காதலும் கைகோர்த்த மற்றுமொரு ஒரு அழகிய காதல் கதை தான் Salt N' pepper .

தமிழ் சினிமாவை காமெடிப்பேய் பிடித்து ஆட்டுவது போல, மலையாள சினிமாவிற்குத் தற்போது காதல் சீசன் போல...
தட்டத்தின் மறையத்து , அன்னயும், ரசூலும் வரிசையில் Salt N pepper.
கதை..?
ஸ்பெஷலாக சொல்வதற்கு ஏதுமில்லாத, ஏற்கனவே பலமுறை பார்த்து சலித்த ஆள்மாறாட்டக் கதை தான் என்றாலும், போரடிக்காத திரைக்கதையால் படம் புதிதாகத் தெரிகிறது .

இரண்டாம் பாதியில் ஒரு நல்ல சைக்கலாஜிக்கல் திரில்லராக மாற வாய்ப்பிருந்தும், அதற்கெல்லாம் இடம் கொடுக்காமல் , ஆர்ப்பாட்டமில்லாத
, இயல்பான திரைக்கதையால் ஈர்க்கிறது இந்தப்படம்.
Characterization ம், கதாபாத்திரத்திற்கேற்ற நடிகர்களும் , படத்தின் பெரிய பிளஸ், குறிப்பாக மனு'வாக நடித்த ஆஸிஃப் மற்றும் அந்த சமையல்காரர் , சரியான தேர்வு.

காட்சிகளால் நகரும் பிரம்மாண்டமான கதைகளுக்கு திரைக்கதை அமைப்பதை விட , இந்த மாதிரி சாதாரணக் கதைகளுக்கு திரைக்கதை அமைத்து , சின்னச்சின்ன சம்பவங்களால் ,தொய்வடையாமல் படத்தைக் கொண்டு செல்வதில் தான் இயக்குனரின் திறமை வெளிப்படும், இதை மலையாள சினிமா சிறப்பாக செய்வதால், இந்தப்படம் உட்பட சுமார் ஆறு, ஏழு படங்களுக்கு மேல் தமிழில் மறு உருவாக்கம் செய்யப்படுகின்றன . மொத்தத்தில் , பார்க்க வேண்டிய படம் , இந்த Salt N pepper.


http://www.youtube.com/watch?v=zbpFUAQvJTA

No comments:

Post a Comment