Witness for the prosecution : (1957 )
தனிப்பட்ட முறையில் எனக்கு (ஏறக்குறைய ) Film noir காலகட்டத்தில் வந்த கருப்பு/வெள்ளைப் படங்களின் மீது எப்போதும் ஒரு தனிக்கவனம் உண்டு. எந்த ஜெனராக இருந்தாலும், சொல்ல வந்த விஷயத்தை பொட்டில் அடித்த மாதிரி தெளிவாக சொல்வதாலும், கிராஃபிக்ஸ் தலைவலி எல்லாம் இல்லாமல், திரைக்கதை வசனத்தை மட்டுமே நம்பி எடுக்கப் படுவதாலும், B/W படங்கள் என்றுமே பெஸ்ட், அது எந்த மொழியாக இருந்தாலும் சரி.
அந்த வகையில் நீண்ட நாட்களாக HD யில் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டு , பார்க்காமலே இருந்த இந்தப்படத்தை நேற்று தான் பார்க்க முடிந்தது.படத்தைப் பற்றி ஒரு வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால், 'exxxcellllentt...!!'
படம் முடிந்து, மீண்டும் இயல்பு நிலைக்கு வர பல நிமிடங்கள் பிடித்தது.
இன்னும் இதன் பாதிப்பிலிருந்து முழுமையாக வெளிவர முடியவில்லை.
one of the best investigation film I ve ever seen in my recent days..!!
இதே ஜெனரில் வெளிவந்த A separation , 12 Angry men படங்களைப் பார்க்கும் போது இதே உணர்வு வந்த போதும், இந்தப் படம் தரும் உணர்வு, டைப் பண்ண முடியாதது. felt like a roller coaster ride.
அகதா கிறிஸ்டியின் மேடை நாடகத்தை அடிப்படையாகக் கொண்ட courtroom thriller . இயக்கம் Billy Wilder.
பொதுவாகவே நீதிமன்ற வழக்குகளை அடிப்படையாகக் கொண்ட படங்களில் வசனம் ரொம்ப வலுவாகவே இருக்கும் , இந்தப்படம் அதற்கு இன்னொரு உதாரணம் .
(கொஞ்சம் dramatical'ஆக இருந்த போதும்) . வழக்கமான கதைதான் , ஒரு கொலை, அதனை அடிப்படையாகக் கொண்ட வாதப்பிரதிவாதங்கள்.
ஆனால் இந்த அளவுக்கு சிறப்பான ஒரு படத்தை சமீபத்தில் எங்கும் பார்த்ததாக நினைவில்லை.
குற்றம் சாட்டப்பட்டவர் , நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் போது, குற்றம் நடந்ததற்கு முன்பு அவர் செய்த சின்ன, சின்ன செயல்கள் கூட வழக்கறிஞரின் வாதத்திறமையால் , அவருக்கு சாதகமாகவோ பாதகமாகவோ மாறுவது , கோர்ட் ரூம் படங்களின் திரைக்கதைக்கே உரிய தனிச்சிறப்பு . இந்தப்படத்திலும் புத்திசாலித்தனமாக திரைக்கதை அமைக்கப்பட்டு , சின்னச் சின்ன detail கூட அற்புதமாகப் பயன்படுத்தப் பட்டுள்ளது . படத்தின் climax, கடைசி பத்து நிமிடம் damn good....
ஒரு பாடல் காட்சிக்காக ஏழு கோடி செலவு செய்து, ஆறு நாடுகளுக்கு செல்லும் இயக்குனர்கள் இந்தப்படத்தைக் கண்டிப்பாகப் பார்க்க வேண்டும், ஏன்னா, மொத்தப் படத்துக்கும் , ரெண்டே லொக்கேஷன் தான், Wilfred s office and courtroom .
ஒருவேளை நீங்களும் , இன்னும் இந்தப் படத்தை பாக்கலைன்னா , மொதல்ல கண்டிப்பா பாருங்க, strongly recommended....
http://www.youtube.com/watch?v=M0EDUuvuIks
No comments:
Post a Comment