Friday, December 13, 2013

Mad Detective : (chinese) 2007

Mad Detective : (chinese)
2007



லூயிஸ் புனுவலின் Obsure object of Desire படத்தில் , ஒரு பணக்காரக் கிழவர் , ஒரு ஏழை இளம்பெண்ணை அடைய முயற்சி செய்வார். அந்தப்பெண்ணும் ஒரு முறை அவரைக் காதலிப்பது போலவும், மறுமுறை அவரை வெறுப்பது போலவும் மாறி மாறிப் பேசி அவரை அலைய விடுவாள். இதில் என்ன புதுமை என்றால் , அந்தப்பெண் அவரிடன் அன்பாகப் பேசும் போது ஒரு நடிகை, அவரை வெறுக்கும் போது அந்தக் கதாபாத்திரத்திற்கு வேறு நடிகை என இருவேறு நடிகைகளை ஒரே கதாபாத்திரத்தில் நடிக்க வைத்து இருப்பார் புனுவல்.


அதாவது ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒன்றுக்கொன்று எதிரெதிரான இரண்டு வேறு வேறு குணாதிசயங்கள் உள்ளன என்பதை காட்சியாக விளக்க அந்த முறையைப் பயன்படுத்தி இருப்பார் புனுவல்.

ஒவ்வொரு தோற்றத்தையும் , செய்கையையும் வைத்து அவனுடைய குணாதிசயம் இதுதான் என்று எடை போடும் நாம், அவனுடைய அடி மனதின் உண்மையான உருவத்தை கவனிக்கத் தவறி விடுகிறோம் . அப்படி ஒருவனால் , பிறர் ஆழ்மனங்களின் personality'களைக் காண முடிந்தால் , அதுவும் அவன் ஒரு டிடெக்டிவ்'வாக இருந்தால், இதுதான் Mad Detective படத்தின் ஆரம்பப்புள்ளி .

Bun' ஒரு மனப்பிறழ்வு அடைந்த , சற்றே மறை கழண்ட ஒரு புத்திசாலி (!) டிடெக்டிவ் .
அதாவது உயரதிகாரி Retirement'க்கு தனது காதையே அறுத்து gift கொடுக்கும் அளவுக்கு ஒரு புத்தி பேதலித்த மனிதர்.

கட்டாய ஓய்வுக்குப்பிறகு,மனைவியுடன் வீட்டில் இருக்கும் அவரை ஹோ' என்னும் ஒரு டிடெக்டிவ் சந்திக்கிறார்.

சுமார் பதினெட்டு மாதங்களுக்கு முன்பு, Wong, Chi-wai என்னும் இரண்டு காவலர்கள் காட்டிற்குள் ஒரு குற்றவாளியைத் துரத்திச்செல்கையில்
, Wong தனது துப்பாக்கியுடன் காணாமல் போகிறார் . அதைத்தொடர்ந்து , பல இடங்களில் கொள்ளை நடக்கிறது. கொள்ளை, இரண்டு இடங்களில் கொலையில் முடிகிறது . சம்பவ இடங்களில் கிடைத்த தோட்டாக்கள் , காணாமல் போன Wong துப்பாக்கியிலிருந்து சுடப்பட்டவை எனத்தெரிய வருகிறது . பல மாதங்களாக விசாரித்தும் எந்தத்தடயமும் கிடைக்கவில்லை , இந்தக்கேஸைத் துப்பறிய உதவுமாறு கேட்க , investigation ஆரம்பமாகிறது .
Bun தனக்கே உரிய முறையில் , தனது வேலையை ஆரம்பிக்கிறார்.

டிடெக்டிவ் Bun ஏன் இப்படி இருக்கிறார் என்பதற்கு விளக்கம் எந்த இடத்திலும் சொல்லப்படவில்லை. எனினும் அது ஒரு குறையாகத் தெரிவதில்லை. சற்றே குழப்பும் வகையில் திரைக்கதை , அதாவது கதாபாத்திரங்களின் inner personality , மேலே சொன்னது போல ஒரே கதாபாத்திரத்திற்கு வெவ்வேறு நடிகர்கள் , இதைப்புரிந்து கொண்டால் no confusion .
ஆனால் டிடெக்டிவ் bun சொல்வது போலவே நடப்பதால், பரபரப்பு சற்றே மிஸ்ஸிங். அதாவது என்ன நடந்தது / நடக்கும் என்பதை ஆரம்பத்திலேயே சொல்லி விடுவதால், திரைக்கதை கொஞ்சம் டல்'லடித்த feeling . ஆனால் , இது நிறைய படவிழாக்களில் Best Screenplay award வாங்கியிருக்கிறது.
பார்க்க வேண்டிய படம்.

http://www.imdb.com/title/tt0969269/

No comments:

Post a Comment