Batman begins : (special post)
நோலனின் படங்களின் வசனங்கள் பற்றி எழுத ஆரம்பித்தால் அது மெகா சைஸுக்குப் போய்விடும், உதாரணத்திற்கு ஒன்றை மட்டும் பார்ப்போம்.
Batman begins படத்தின் வசனங்கள் பற்றி எல்லோருக்குமே தெரியும். வசனங்கள் ஒவ்வொன்றும் தனிச்சிறப்பு வாய்ந்தவை.
எனக்கு மிகவும் பிடித்த ஒரு வசனம், நான் அடிக்கடி பார்க்கும் ஒரு சீன், பார்க்கும் போதெல்லாம் என்னை நெகிழ வைக்கும் வசனம்.
Batman begins படத்திலிருந்து ...
Bruce Wayne தன்னுடைய Batman என்னும் அடையாளத்தை மறைத்து, தன் மீது யாருக்கும் சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக , தன்னை ஒரு பணக்கார play boy 'யாகக் காட்டிக்கொள்வார். இந்த சூழ்நிலையில் ,கோதம் நகரின் முக்கியஸ்தர்கள் கூடி இருக்கும் ஒரு நட்சத்திர ஹோட்டலில் எல்லோர் முன்னிலையிலும் பெண்களுடன் நீச்சல் குளத்தில் விளையாடி விட்டு , ஹோட்டலை விட்டு வெளியே வரும்
சமயம், தன்னுடைய பால்ய வயதிலிருந்து மானாசீகமாகக் காதலிக்கும் Rachel'ஐ நீண்ட நாளைக்குப் பிறகு இந்த மாதிரி நிலையில் பெண்களுடன் சந்திக்கும் ஒரு இக்கட்டான சூழ்நிலை.அப்போது வரும் வசனங்கள்.....
இதனால் தான் , இதனால் தான் நோலனின் படங்கள் மற்ற படங்களிலிருந்து வேறுபடுகின்றன . கவனித்துப்பார்த்தால் தெரியும்.
உடையெல்லாம் நனைந்து, பெண்களுடன் நிற்கும் அவனிடம் Rachel,
What u r doing ?
எனக்கேட்க , இப்போது Wayne ,தான் ஊருக்காகத்தான் இந்த மாதிரி நடிக்கிறேன் என வெளிப்படையாக சொல்ல முடியாத இக்கட்டான நிலை, என்ன சொல்வதென தடுமாறி,
Rachel... all of... all this, its... its not me... inside , I am.. I am more...
என்று தடுமாற, அப்போது Rachel, மனதிலுள்ள ஆற்றாமையை மறைத்துக் கொண்டு, வலிய வர வைத்த புன்னைகையுடன் சொல்வாள்,
Bruce... deep down u may still be that great kid u used to be,
BUT, ITS NOT WHO U R UNDERNEATH... ITS WHAT U DO THAT DEFINES U.
என்று சொல்லிவிட்டு, நகர்ந்து விடுவாள்.
இதனுடன் அந்தக் காட்சி முடிந்துவிடும்.
நிற்க,
க்ளைமேக்ஸில் ஒரு காட்சி, Wayne , Batman'னாக மாறி,
வெறிபிடித்த மக்களிடமிருந்து Rachel 'ஐயும், அந்தச் சிறுவனையும் காப்பாற்றுகிறான். அப்போதும் Rachel'க்கு Wayne தான் Batman என்பது தெரியாது,
இருவரையும் காப்பாற்றிவிட்டு, கிளம்பும் அவனிடம் ,Rachel,
Wait...u could die, Atleast tell me ur name .
என்பாள்.
மெதுவாக அவளை நோக்கித்திரும்பும் Batman,
IT'S NOT WHO I AM UNDERNEATH... BUT WHAT I DO THAT DEFINES ME.
என்று முன்பு அவள் சொன்ன அதே வசனத்தை சொல்லிவிட்டு செல்கிறான்.
அப்போதுதான் Rachel'லுக்கும் உண்மை தெரிய ,
Bruce...?!
என்று சொல்லும் சமயம், முதன்முறையாக , Batman theme ஒலிக்கிறது .
இந்த வசனமும் , காட்சியமைப்பும், இசையும் ஒன்றுக்கொன்று இணைந்து, முதுகுத்தண்டு சில்லிடும் உணர்வைத்தரும். இதனாலேயே நோலனின் படங்களின் திரைக்கதைகள் தனித்துவம் பெறுகின்றன . அதாவது சம்பந்தமில்லாத இரண்டு காட்சிகளையோ, வசனங்களையோ எதிர்பார்க்காத இடத்தில் இணைத்தல்...
இதற்கு நோலனின் படங்களிலிருந்து நிறைய உதாரணங்கள் சொல்ல முடியும்.
நோலனின் படங்களை கவனமாகப் பார்த்தவர்களுக்கு(!!) இது நன்றாகத் தெரியும்.
No comments:
Post a Comment